அனைத்துலக ஆயுதக் குறைப்பு மாநாடு ஈரானில் நடக்கிறது
ஏப்ரல் 26,2011: ஆயுதக்குறைப்பிற்கான சர்வதேச மாநாடு ஈரானி்ல் வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது.
இது குறித்து ஈரான் அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அணு ஆயுதங்கள் உள்ளிட்ட
பல்வேறு பயங்கர ஆயுதங்களை குறைத்துக்கொள்வது குறித்த சர்வதேச மாநாடு ஈரானின் தலைநகர்
டெஹரானில் வரும் ஜூன் 12 மற்றும் 13-ம் தேதிகளில் நடக்கவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பல்வேறு நாடுகளிடையே ஏற்பட்டுள்ள ஆயுதக் குறைப்பு தொடர்புடைய முக்கிய பிரச்சனைகள்
குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது