2011-04-25 14:46:52

மக்கள் போராட்டங்கள் நன்மையைக் கொணரும் என்கிறார் எருசலேம் முதுபெரும் தலைவர்


ஏப்ரல் 25, 2011. அடக்குமுறை ஆட்சிகளுக்கு எதிராக மத்தியகிழக்கு நாடுகளிலும் வட ஆப்ரிக்காவிலும் இடம்பெறும் அரசியல் போராட்டங்கள், முன்னேற்றத்தை நோக்கிய ஒரு நடவடிக்கை எனினும், அதன் இறுதி முடிவை குறித்த கவலை உள்ளது என்றார் எருசலேமின் இலத்தீன் ரீதி முதுபெரும் தலைவர் Fouad Twal.
ஜனநாயகம் நோக்கிய இப்போராட்டங்களின் முடிவுகள் பொதுநலனையும் நல்ல வருங்காலத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார் அவர்.
அரபு நாட்டு இளைஞர்கள் தங்கள் உயிர்துடிப்பையும் பலத்தையும் உணர்ந்து வருங்காலம் மற்றும் இறுதி இலக்கு பற்றிய விழிப்புணர்வுடன் செயல்படுவது மகிழ்ச்சியைத் தருவதாக உள்ளது என்றார் பேராயர் Fouad Twal.
மக்களிடமிருந்த பயம் அகன்று அது அரசுகளிடம் இடம் மாறியுள்ளதாக உரைத்த முதுபெரும் தலைவர், சமூகத்தில் மக்கள் கருத்து எழுச்சிப் பெற்று வருகின்றது என்றார். தனக்கென தனிப்பணியைக் கொண்டிருக்கும் எருசலேம் தலத்திருச்சபை, தன் நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் தலையீடுகள் மூலம், நீடித்த அமைதிக்கான முயற்சிகளில் முழு ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் கூறினார் பேராயர் Twal.








All the contents on this site are copyrighted ©.