2011-04-20 15:12:09

இந்தியாவில் அணுமின் நிலையத் திட்டத்திற்கு எதிராக போராட்டம்


ஏப்ரல்20,2011.மேற்கு இந்தியாவில் அணுமின் நிலையம் கட்டுவதற்கானத் திட்டத்திற்கு எதிராக இடம் பெற்று வரும் வன்முறைப் போராட்டங்களில், போராட்டக் கும்பல்கள் ஒரு மருத்துவமனையைச் சூறையாடியதோடு பேருந்துகளுக்கும் தீ வைத்துள்ளன என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
மஹாராஷ்டிர மாநிலத்தின் இரத்தினகிரியில் நிலவும் பதட்டநிலைகளைக் களைவதற்கு காவல்துறை எடுத்த நடவடிக்கையில் குறைந்தது இருபது பேர் காயமடைந்துள்ளனர்.
ஆயிரம் கோடி டாலரில் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ள இந்த அணுமின் நிலையம் உலகிலே மிகப் பெரியதாக இருக்கும் என்று நம்பப்படும் வேளை, இது தங்களின் பாரம்பரிய மீன் தொழில் ஆதாரங்களை அழிக்கும் என்று, இத்திட்டத்தை எதிர்த்துப் போராடும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
இந்தப் பகுதி நிலநடுக்கத்தால் எளிதில் தாக்கப்படக்கூடியது எனவும் ஜப்பானின் ஃபுக்குஷிமா அணுமின் நிலையப் பேரிடர் தங்களுக்கு மிகுந்த பயத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்







All the contents on this site are copyrighted ©.