2011-04-20 15:09:21

அராபிய உலகத்தில் அனைத்துக் குடிமக்களும் சம உரிமைகள் பெற்றால் மட்டுமே அங்கு வசந்தம் மலரும் – பேராயர் சாக்கோ


ஏப்ரல்20,2011. மத்திய கிழக்குப் பகுதியில் அடிப்படைவாத இயக்கங்கள் அதிகரித்து வருவதையும் இன மற்றும் மதப் பிரிவினைவாதப் போக்குகள் வளர்ந்து வருவதையும் எச்சரித்துள்ளார் ஈராக்கின் கிர்குக் பேராயர் லூயிஸ் சாக்கோ.
அராபிய உலகத்தில் ஏற்பட்டுள்ள சுதந்திரம் மற்றும் சனநாயகத்துக்கானக் கோட்பாடுகள் இன மற்றும் மதப் பிரிவினைவாதப் போக்குகளால் நசுக்கப்படக்கூடும், இதில் சிறுபான்மையினர் குறிப்பாக கிறிஸ்தவர்கள் ஆபத்தை எதிர்நோக்குவார்கள் என்றும் பேராயர் சாக்கோ கூறினார்.
மாறாக, அரசுகள் அனைத்துக் குடிமக்களுக்கும் சம உரிமைகளும் ஒரேமாதிரியான குடியுரிமையும் வழங்கினால் மட்டுமே சனநாயகம் இயலக்கூடியது என்றும் அவர் தெரிவித்தார்.
இன்று எந்த அரபு நாட்டிலாவது ஒவ்வொரு குழுவின் உரிமைகளையும் தனித்துவங்களையும் மதிக்கக்கூடிய அமைப்பை உருவாக்கத் திட்டம் இருக்கிறதா என்ற கேள்வியையும் பேராயர் எழுப்பினார்.








All the contents on this site are copyrighted ©.