2011-04-19 14:23:21

மத்திய கிழக்குப் பகுதியின் அமைதிக்கானப் பேச்சுவார்த்தைகளில் அதிபர் ஒபாமா மிகுந்த ஈடுபாடு காட்டுமாறு பல்சமயத் தலைவர்கள் அழைப்பு


ஏப்ரல்19,2011 மத்திய கிழக்குப் பகுதியின் அமைதிக்கானப் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்க ஐக்கிய நாட்டு அதிபர் பாரக் ஒபாமா மிகுந்த செயலூக்கத்துடன் ஈடுபடுமாறு அமெரிக்க ஐக்கிய நாட்டு கர்தினால் தெயதோர் மெக்காரிக் உட்பட கிறிஸ்தவ, யூத மற்றும் முஸ்லீம் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இஸ்ரேலும் பாலஸ்தீனாவும் ஒத்துக் கொண்ட 1967ம் ஆண்டின் உடன்பாட்டின் அடிப்படையில் வெஸ்ட் பாங்க் மற்றும் காசாவில் பாலஸ்தீனிய நாட்டை உருவாக்குமாறு இத்தலைவர்களின் கடிதம் கேட்டுள்ளது.
அகதிகள் குறித்த நியாயமான தீர்மானம் இஸ்ரேலின் மக்கள்தொகைக்கு அச்சுறுத்தலாக இருக்காது, இஸ்ரேலும் பாலஸ்தீனாவும் எருசலேமை தங்களது தலைநகரங்களாகப் பகிர்ந்து கொள்வதிலும் பிரச்சனை இருக்காது என்று அதிபர் ஒபாமாவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர் அத்தலைவர்கள்.
எருசலேம், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனாவுக்கு அதிபர் ஒபாமா விரைவில் பயணம் மேற்கொண்டு அப்பகுதியில் அமைதியைக் கொண்டு வருவது குறித்து கலந்து பேசுமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.