2011-04-19 14:24:00

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பாப்பிறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் ஆறாம் ஆண்டு


ஏப்ரல்19,2011. ஏப்ரல் 19ம் தேதி இச்செவ்வாய்க்கிழமை திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தான் பாப்பிறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் ஆறாம் ஆண்டைச் சிறப்பித்தார்.
1927ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி ஜெர்மனியில் பிறந்த Joseph Aloisius Ratzinger என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், 2005ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி பாப்பிறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் பின்னர் ஏப்ரல் 24ம் தேதி பாப்பிறையாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
தனது 78வது வயதில் பாப்பிறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் என்ற பெயரையும் தெரிவு செய்தார்.
இவர் திருச்சபையின் 265வது திருத்தந்தையாக இருக்கிறார்.








All the contents on this site are copyrighted ©.