2011-04-19 14:22:44

இங்கிலாந்து அரச குடும்பத் திருமணத்திற்கெனச் சிறப்புச் செபம்.


ஏப்ரல் 19, 2011. வரும் வாரம் இலண்டனில் இடம்பெறவிருக்கும் அரச குடும்பத் திருமணத்திற்கெனச் சிறப்பு செபம் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளனர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள்.
புதுமணத் தம்பதியரின் அன்புநிறை வருங்கால வாழ்வுக்கும், நாட்டிற்கும் காமன்வெல்த் அமைப்பிற்கும் உழைப்பதற்கானப் பலத்திற்கும் என இறைவனை வேண்டியுள்ளனர் ஆயர்கள் அச்செபத்தில். இங்கிலாந்தின் இளவரசர் 28 வயதான வில்லியமிற்கும் 29 வயதான கேத்ரீன் மிடில்டனுக்கும் இடையேயான திருமணம் இம்மாதம் 29ந்தேதி கான்டர்பரி ஆங்கிலிக்கன் பேராயர் ரோவன் வில்லியம்ஸின் தலைமையில் வெஸ்ட்மின்ஸ்டர் ஆலயத்தில் இடம்பெற உள்ளது. குடும்ப நண்பர்கள், உறவினர்கள் என 1900 பேரே இவ்வாலயத்திற்குள் திருமணக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள அழைப்புப் பெற்றிருக்கும் வேளை, உலகம் முழுவதும் ஏறத்தாழ 200கோடிப் பேர் இதனைத் தொலைக்காட்சியில் பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.