2011-04-18 14:21:23

லிபியாவில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்ள ஐ.நா. ஒப்பந்தம்.


ஏப்ரல் 18, 2011. உள்நாட்டுப் போரால் துன்பங்களை அனுபவித்து வரும் லிபியாவில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்ள அரசுடன் ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கியுள்ளதாக அறிவித்தார் ஐநா பொதுச்செயலர் பான் கி மூன்.
மனிதாபிமானப் பணிகள் தலைநகர் Tripoli-யிலிருந்து செயல்படும் என்றார் அவர்.
இதற்கிடையே, புரட்சியாளர்கள் வசம் இருக்கும் Misrata நகரிலும் மனிதாபிமானப் பணிகளுக்கான மையம் ஒன்றை ஆரம்பிக்க ஐநாவுடன் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அரசின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர் Moussa Ibrahim கூறினார்.
மூன்று இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட இந்நகரில் உணவு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படவும், மக்கள் பாதுகாப்புடன் வெளியேறவும் இவ்வொப்பந்தம் வழி செய்கிறது.








All the contents on this site are copyrighted ©.