2011-04-15 15:44:13

ஏப்ரல் 16 அன்று தன் 84வது பிறந்தநாளைக் கொண்டாடும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்


ஏப்ரல் 15,2011. இச்சனிக்கிழமை ஏப்ரல் 16 அன்று தன் 84வது பிறந்தநாளைக் கொண்டாடும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு அனுப்புவதற்காக, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள் பேரவை ஒரு மின் வாழ்த்துமடலைத் தயாரித்துள்ளது.
ஆறு மாதங்களுக்கு முன் திருத்தந்தை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளுக்குத் திருப்பயணம் மேற்கொண்டதன் ஒரு தொடர்ச்சியாகவும், அவருக்குத் தங்கள் நன்றியையும் பாராட்டையும் தெரிவிப்பதற்காகவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதேன்று ஆயர்கள் பேரவையின் சார்பில் பேசியவர் கூறினார்.
Facebook என்ற இணையத்தள வசதியின் மூலம் திருத்தந்தைக்கு வாழ்த்துக்களையும், செபங்களையும் அனுப்பலாம் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.1927ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி புனித சனிக்கிழமையன்று பிறந்த Joseph Alois Ratzinger அதே நாளில் திருமுழுக்கும் பெற்றார். 2005ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி திருத்தந்தையாக தெரிவு செய்யப்பட்ட கர்தினால் Ratzinger, திருத்தந்தை இரண்டாம் ஜான்பாலுக்குப் பின் திருச்சபையின் தலைவராகப் பொறுப்பேற்றார்.







All the contents on this site are copyrighted ©.