2011-04-14 16:02:55

லாத்விய அரசுத்தலைவர் திருத்தந்தையுடன் சந்திப்பு


ஏப்ரல் 14,2011. லாத்வியா அரசுத்தலைவர் Valdis Zatlers இவ்வியாழனன்று திருப்பீடத்தில் திருத்தந்தை மற்றும் திருப்பீட உயர் அதிகாரிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டார்.
திருத்தந்தையுடன் முதலில் தனியே இடம் பெற்ற இச்சந்திப்பில், திருப்பீடத்துக்கும் லாத்வியாவுக்கும் இடையேயான உறவு குறித்தும், இரு நாடுகளிடையே 2000மாம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒப்பந்தம் மற்றும் லாத்வியாவில் கத்தோலிக்க திருச்சபைக்கு இருக்கும் தனியிடம் குறித்தும் விவாதிக்கப்பட்டன.
அந்நாட்டின் கத்தோலிக்கச் சமூகம், கல்வி மற்றும் சமூகப் பணியில் ஆற்றி வரும் நற்சேவைகள் குறித்தும் பேசப்பட்டன.
இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, நாடுகளுக்கிடையே உறவுகளுக்கானத் துறைச் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்துப் பேசினார் லாத்விய அரசுத்தலைவர் Valdis Zatlers.








All the contents on this site are copyrighted ©.