2011-04-14 15:50:01

அந்தியோக்கு மாரோனைட் கிறிஸ்தவ சபையின் முதுபெரும் தலைவர் திருத்தந்தையுடன் சந்திப்பு


ஏப்ரல் 14,2011. முதுபெரும் தலைவர்கள், இறைவாக்கினர்கள், திருப்பணியாளர்கள், ஏன், கிறிஸ்துவே வாழ்ந்து போதித்துச் சென்ற மத்தியக் கிழக்குப் பகுதி நாடுகள் தற்போது 'உண்மையின் வார்த்தை'யாம் இறைவன் தரவல்ல அமைதிக்காக ஏங்குகின்றன என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
அந்தியோக்கு மாரோனைட் கிறிஸ்தவ சபையின் 77வது முதுபெரும் தலைவர் Pierre Bechara Raiஐ இவ்வியாழனன்று முதன் முறையாகத் திருப்பீடத்தில் சந்தித்த பாப்பிறை, நிலைத்த அமைதிக்காக எங்கும் மத்தியக் கிழக்கு நாடுகளில் நற்செய்தி மீண்டும் அறிவிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இளைஞர்களுக்கான ஆன்மிகம், நன்னெறி மற்றும் அறிவு வழங்கும் கல்வியில் திருச்சபையின் பங்கேற்பை வலியுறுத்திய திருத்தந்தை, அடிப்படை மதிப்பீடுகள் எவ்வித பாகுபாடுமின்றி வருங்காலத் தலைமுறையினருக்கு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.நாட்டின் வளர்ச்சி, மனிதாபிமானம், ஒருமைப்பாடு இவற்றைக் கட்டியெழுப்பும் பொறுப்புடைய மனிதர்களாக இளையோரை உருவாக்கும் திருச்சபையின் கடமையைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இளையோரின் ஆர்வமும் நம்பிக்கையும் அகில உலக சமூகத்திற்கும், திருச்சபைக்கும் தேவையான ஒன்று என்றும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.