2011-04-13 16:07:33

லிபியாவில் அமைதியை உருவாக்க இளையோரின் எண்ணங்களுக்கும் செவிமடுக்க வேண்டும் - Tripoliன் அப்போஸ்தலிக்க நிர்வாகி


ஏப்ரல் 13, 2011. கலந்துரையாடல் மூலமே நாட்டில் அமைதியை உருவாக்க முடியும் என்றும், இந்தக் கலந்துரையாடலில் இளையோரின் எண்ணங்களுக்கும் முக்கியமாக செவிமடுக்க வேண்டுமென்றும் லிபியாவில் உள்ள Tripoliன் அப்போஸ்தலிக்க நிர்வாகி கூறினார்.
லிபியாவில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள உடன்பாட்டு முயற்சிகளில் இதுவரை ஆக்கப்பூர்வமான முடிவுகள் வெளி வரவில்லை என்று ஆயர் ஜியோவான்னி இன்னோசென்சோ மர்த்தினெல்லி தன் கவலையை வெளியிட்டார்.
ஆயுதத் தாக்குதலைக் கைவிட்டு, பேச்சு வார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று ஆப்ரிக்க ஒன்றியம் முன்வைத்துள்ள திட்டத்தைப் புரட்சிக் குழுக்கள் ஏற்காமல் இருப்பது சமாதான முயற்சிகளுக்குப் பெரிதும் தடையாக உள்ளதென்று ஆயர் மர்த்தினெல்லி சுட்டிக் காட்டினார்.இளையோரே இந்நாட்டின் எதிர்காலம் என்பதால் அவர்களது எண்ணங்களுக்கும் செவிமடுப்பது மிகவும் முக்கியம் என்று கூறிய ஆயர் மர்த்தினெல்லி, லிபியாவின் பிரச்சனைகளில் உதவுவதற்கு பல உலக அமைப்புக்கள் தாயாராக இருந்தாலும், அவைகளை ஏற்பதற்கு லிபியா இன்னும் தயாராக இல்லை என்பதையும் வருத்தத்துடன் எடுத்துரைத்தார்.







All the contents on this site are copyrighted ©.