2011-04-12 12:28:21

சிறார்களின் கல்விக்கான அருட்கன்னியர்களின் பணியைப் பாராட்டியுள்ளது UNICEF


ஏப்ரல் 12, 2011. பள்ளிப் படிப்பை இடையிலேயே நிறுத்தும் இந்தியச் சிறார்கள் தங்கள் கல்வியைத் தொடர விழிப்புணர்வுக் கூட்டங்களை இந்தூர் நகரில் நடத்தும் Holy Spirit துறவு சபை கன்னியர்களின் பணியைப் பாராட்டியுள்ளார் UNICEF அமைப்பின் ஆலோசகர் Jyoti Bhatia.
மிகவும் ஏழ்மை நிலையில் சேரிகளில் வாழும் சிறார்களின் கல்விக்கென சரியான நேரத்தில் சரியான முயற்சியை அருட்சகோதரிகள் எடுத்துள்ளதாகக் கூறினார் அவர்.
இந்தூர் நகரில் ஏறத்தாழ 150 சிறார்களிடையே இந்த விழிப்புணர்வு திட்டத்தை நடத்தி, 14 வயது வரை கல்வி கற்பதற்கென அச்சிறார்களுக்கு இருக்கும் உரிமையை வலியுறுத்தி வருகின்றனர் இக்கத்தோலிக்க கன்னியர். கல்விக்கான உரிமை குறித்த சட்டம் பற்றிய விழிப்புணர்வைச் சிறார்களில் ஏற்படுத்தவேண்டிய கடமையை உணர்ந்தே தாங்கள் இத்திட்டத்தை நிறைவேற்றி வருவதாக உரைத்தார் Holy Spirit துறவு சபை அருட்கன்னிகை ரோசிலி பஞ்சிகரண்.








All the contents on this site are copyrighted ©.