2011-04-12 12:27:01

இலஞ்ச ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு இந்திய தலத்திருச்சபையின் ஆதரவு.


ஏப்ரல் 12, 2011. இலஞ்ச ஊழலுக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள மசோதா, சட்டமாக்கப்படும்போது இந்தியா ஓர் ஊழலற்ற நாடாக திகழும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளனர் தலத்திருச்சபைத் தலைவர்கள்.
ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த அன்னா ஹசாரேயின் விண்ணப்பத்தை ஏற்று புதிய மசோதாவை வடிவமைக்க அமைச்சர்கள் மற்றும் சமூக நடவடிக்கையாளர்களைக் கொண்ட குழுவை உருவாக்க உள்ளதாக இந்திய அரசு இசைவு அளித்துள்ளதைப்பற்றி கருத்து வெளியிட்ட டெல்லி பேராயர் வின்சென்ட் கொன்செசாவோ, தற்போது முதல் தடை தாண்டப்பட்டுள்ளதாகவும், இது மக்களின் வெற்றி எனவும் தெரிவித்தார்.
இலஞ்ச ஊழல் என்பது நாட்டில் ஆழமாக வேரூன்றியுள்ளபோதிலும் அதனை முற்றிலுமாக அகற்ற முடியும் என்ற நம்பிக்கையுடன் ஒவ்வொருவரும் செயல்படவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார் பேராயர்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இடம்பெறும் மாற்றம் மூலமே இலஞ்ச ஊழலை முற்றிலுமாக அகற்ற முடியும் என்ற கருத்தையும் முன்வைத்தார் பேராயர் கொன்செசாவோ.








All the contents on this site are copyrighted ©.