2011-04-09 14:53:46

மலேசியாவில் எல்லா மொழிகளிலும் விவிலியங்களை இறக்குமதி செய்வதற்கு அரசு அனுமதி


ஏப்ரல்09,2011. மலேசியாவில் எல்லா மொழிகளிலும் விவிலியங்களை இறக்குமதி செய்து அவை அந்நாட்டில் அச்சிடப்படுவதற்கு அனுமதியளித்துள்ளது மலேசிய அரசு.
மலேசியாவில் விவிலியங்களை இறக்குமதி செய்வதற்கு எந்தவிதக் கட்டுப்பாடும் விதிக்கமாட்டோம் என அரசு கிறிஸ்தவர்களுக்கு உறுதியளித்துள்ளது.
மலாய் மொழியில் விவிலியங்களை வெளியிடுவது குறித்த விவாதத்தில் அரசு நிறைவேற்றியுள்ள பத்து தீர்மானங்களில் இந்த அனுமதிகளும் உள்ளடங்கும்
Kuching மற்றும் Port Klang நகரங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 35,100 விவிலியங்களை பணம் கட்டாமல் எடுத்துக் கொள்வதற்கும் மலேசிய அரசு அனுமதியளித்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.