2011-04-07 15:56:28

மாற்றுத் திறனாளிகள் நாளைக் கொண்டாடிய பங்களாதேஷ் காரித்தாஸ் அமைப்பு


ஏப்ரல் 07,2011. பங்களாதேஷ் காரித்தாஸ் அமைப்பு மாற்றுத் திறனாளிகள் நாளை இப்புதனன்று கொண்டாடியது.
Mymensingh மாவட்டத்தின் Haluaghat எனும் இடத்தில் நூற்றுக்கணக்கான மாற்றுத் திறனாளிகள் மேற்கொண்ட ஊர்வலம், கருத்தரங்கு, மற்றும் கலைநிகழ்ச்சிகள் வழியாக இந்த நாள் கொண்டாடப்பட்டது.
தனக்குள்ள உடல் குறையைக் கண்டு, பள்ளியில் தனக்கு அனுமதி கிடைக்கவில்லை என்ர்பதை எடுத்துச் சொன்ன Hosne Ara என்ற 23 வயது இஸ்லாமியப் பெண், காரித்தாஸ் அமைப்பின் உதவியால் தான் பெற்ற கல்விக்கும், வேலைக்கும் தன் வாழ்நாளெல்லாம் நன்றியறிந்திருப்பதாகக் கூறினார்.
இன்று பிற அரசு அமைப்புக்களும், அரசு சாரா அமைப்புக்களும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிகள் செய்ய முன் வந்திருப்பதற்குக் காரணம் காரித்தாஸ் காட்டிய வழியே என்று Hosne Ara மேலும் கூறினார்.
காரித்தாஸின் உதவியால் கைவினைப் பொருட்களைச் செய்துவரும் Wahab Mian என்ற 53 வயது இஸ்லாமியரும் தன் அனுபவங்களை எடுத்துச் சொல்லி, காரித்தாஸுக்கு தன் நன்றியைக் கூறினார்.காரித்தாஸ் அமைப்பு மேற்கொண்ட ஒரு ஆய்வின் படி, பங்களாதேஷில் 10 விழுக்காட்டு மக்கள் மாற்றுத்திறனாளிகள் என்று கணிக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.