2011-04-07 15:55:18

புனித வியாழனன்று திருத்தந்தை நிறைவேற்றும் திருப்பலியில் எடுக்கப்படும் காணிக்கை ஜப்பான் மக்களுக்கு அனுப்பப்படும்


ஏப்ரல் 07,2011. வருகிற ஏப்ரல் 21ம் தேதி, இயேசுவின் இறுதி இரவுணவை நினைவுகூரும் நாளான புனித வியாழனன்று திருத்தந்தை நிறைவேற்றும் திருப்பலியில் எடுக்கப்படும் காணிக்கை ஜப்பான் மக்களுக்கு அனுப்பப்படும் என்று திருப்பீடம் அறிவித்துள்ளது.
திருப்பீடத்தின் இந்த முயற்சி மற்ற மறைமாவட்டங்களையும் இந்த வழியில் சிந்திக்க ஒரு தூண்டுதலாக இருக்கும் என்று நம்புவதாக திருப்பீடத்தின் 'Cor Unum' அவை Fides செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளது.
திருப்பீடத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஜப்பானின் Sendai மறைமாவட்ட ஆயர் Martin Tetsuo Hiraga திருத்தந்தையின் இந்த முயற்சிக்கு ஜப்பான் மக்களின் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
'Cor Unum' அவை அனுப்பியிருந்த 150000 டாலர்கள் தங்களை வந்தடைந்துள்ளன என்பதை நன்றியோடு குறிப்பிட்ட ஆயர் Hiraga, இந்தத் தொகையைக் கொண்டு மக்களின் வீடுகளையும், சேதமடைந்துள்ள கோவில்களையும் மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று கூறினார்.நிலநடுக்கம், மற்றும் சுனாமியால் சேதமடைந்துள்ள வீடுகளை மீண்டும் வாழ்வதற்குரிய இடங்களாய் மாற்ற இன்னும் ஒரு மாத காலம் ஆகும் என்றும் ஆயர் Hiraga கூறினார்.







All the contents on this site are copyrighted ©.