2011-04-07 15:57:14

இடியுடன் கூடிய மழை, புயல்கள் ஒவ்வொரு மணி நேரத்திலும் 760 முறைகள் ஏற்படுகின்றன - அறிவியல் ஆய்வு


ஏப்ரல் 07,2011. உலகில் இடியுடன் கூடிய மழை, புயல்கள் ஒவ்வொரு மணி நேரத்திலும் 760 முறைகள் ஏற்படுகின்றன என்று அறிவியல் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
வியென்னாவில் கூடியுள்ள ஐரோப்பிய புவியியல் ஒன்றியம் இத்தகவலை வெளியிட்டது. மேலும், இந்த எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் குறைந்து வருகிறதென்றும் கூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையும் புயலும் புவியின் மத்தியப் பகுதிகளில் அதிகம் உள்ளதென்றும், ஆப்ரிக்காவின் காங்கோ பகுதியிலேயே இவை மிக அதிகம் காணப்படுவதாகவும் இவ்வறிக்கை கூறுகிறது.இந்தப் புயல்கள் குறித்த ஆய்வுகள் 1925ம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று உலகெங்கும் அமைந்துள்ள 40க்கும் அதிகமான ஆய்வு நிலையங்களில் ஒவ்வொரு முறையும் மின்னல் தாக்கும்போது புயல்களின் பிரசன்னம் கணக்கிடப்படுகின்றது என்று BBC செய்தி நிறுவனம் கூறியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.