2011-04-06 15:39:48

லிபியாவின் பிரச்சனையில் துருக்கி எடுத்துள்ள முயற்சிகளுக்கு ஆயரின் பாராட்டு


ஏப்ரல் 06,2011. லிபியாவின் பிரச்சனையில் துருக்கி எடுத்துள்ள முயற்சிகள் தனக்கு மிகவும் நம்பிக்கைத் தருகிறதென Tripoliயில் உள்ள அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Giovanni Innocenzo Matinelli கூறினார்.
லிபியாவின் அயல்நாட்டு விவகாரங்களுக்கான இணை அமைச்சர் Abdelati Laabidi இத்திங்களன்று துருக்கியின் அயல்நாட்டு விவகாரங்களுக்கான அமைச்சருடன் மேற்கொண்டுள்ள பேச்சுவார்த்தைகளைக் குறித்து இச்செவ்வாயன்று Fides செய்திக்குப் பேட்டியளித்த ஆயர் Martinelli இவ்வாறு கூறினார்.
இத்திங்கள் நிலவரப்படி லிபியாவின் 22 மாநிலங்களில் Moammar Gadhafiன் கட்டுப்பாட்டில் 11 மாநிலங்களும், அவருக்கு எதிராகப் போரிடுபவர்களின் கட்டுப்பாட்டில் 6 மாநிலங்களும், மீதி ஐந்து மாநிலங்கள் இழுபறி நிலையில் உள்ளதாகவும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.இது வரை லிபியாவின் புரட்சியில் இறந்தவர்களின் எண்ணிக்கை சரிவர கணக்கிடப்பட முடியாத நிலையில் இருப்பதாகவும் பல்வேறு தகவல்கள்படி இந்த எண்ணிக்கை 2500 முதல் 10500 வரை என்று கூறப்படுவதாகவும் செய்திகள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.