2011-04-06 12:10:14

ஏப்ரல் 07. – வாழ்ந்தவர் வழியில்........,


ருவாண்டாவின் கிகாலியில் டுட்சி இனத்தவர்களை அழிக்கும் படலம் ஆரம்பமான நாள் ஏப்ரல் 07. இது 1994ல் இடம்பெற்றது. இதே நாளில் தான் 1943ம் ஆண்டு உக்ரேனில் டெரெபோவ்லியா என்ற இடத்தில் நாசிகள் 1,100 யூதர்களை அரை நிர்வாணமாக்கி நகர வீதிவழியே அழைத்துச் சென்று பின்னர் அவர்களைச் சுட்டுக் கொன்று புதைத்தனர். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், ஏறத்தாழ 60 இலட்சம் ஐரோப்பிய யூதர்கள் ஜெர்மானிய நாசிப் படைகளால் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
ருவாண்டா இனப்படுகொலை என்பது 1994ம் ஆண்டு ருவாண்டாவில் நூறாயிரக்கணக்கில் டுட்சி இனத்தவர்களும், ஹூட்டு மிதவாதிகளும் கொல்லப்பட்ட நிகழ்வாகும். இதில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள். பெருந்தொகையானோர் ஊனமாக்கப்பட்டனர்.
அண்மைக்கால இனப்படுகொலைகள் பற்றி நோக்கும்போது, 1915 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் ஆரம்பமாகிய ஆர்மேனியன் இனப்படுகொலை, கிரேக்க இனப்படுகொலை, யூத இனப்படுகொலை, கம்போடியா இனப்படுகொலை, ருவாண்டா இனப்படுகொலை, போஸ்னிய இனப்படுகொலை, குர்துமக்கள் இனப்படுகொலை, தார்ஃபூர் படுகொலைகள், இலங்கைத் தமிழர் இனப்படுகொலைகளே முன்னணியில் நிற்கின்றன. இத்தகைய படுகொலைகள் மீண்டும் இடம்பெறாத ஒரு சூழலை உறுதிச் செய்வதன் மூலமே, மனித குலம் நாகரீகம் அடைந்து விட்டது என்பதை நிரூபிக்க முடியும்.








All the contents on this site are copyrighted ©.