2011-04-06 15:40:28

ஊழலை எதிர்த்து Kisan Baburao Hazare மேற்கொண்டுள்ள சாகும் வரை உண்ணாநோன்புக்கு கிறிஸ்தவர்கள் ஆதரவு


ஏப்ரல் 06,2011. ஊழலை முற்றிலும் ஒழிக்கச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டுமென்ற கோரிக்கையுடன் 'சாகும் வரை உண்ணாநோன்பு' மேற்கொண்டுள்ள சமுதாய ஆர்வலர் ஒருவரது முயற்சிக்கு இந்தியாவின் பல பகுதிகளிலும் கிறிஸ்தவர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
72 வயதான Kisan Baburao Hazare என்ற சமூக ஆர்வலர் இச்செவ்வாயன்று புது டில்லியில் Jantar Mantar எனும் இடத்தில் தனது உண்ணா நோன்பை ஆரம்பித்தார். குருக்கள், துறவியர், பொது மக்கள் என்று 3000 பேருக்கும் அதிகமானோர் Hazare யுடன் உண்ணாநோன்பில் கலந்து கொண்டனர்.
"ஊழலுக்கு எதிரான இந்தியா" என்ற அமைப்பை உருவாக்கியுள்ள பல சமய மற்றும் சமுதாயத் தலைவர்களில் ஒருவரான புது டில்லியின் பேராயர் Vincent Concessao, மற்றும் சமூக நீதி ஆர்வலாரான இயேசு சபைக் குரு அருள்தந்தை செட்ரிக் பிரகாஷ் ஆகியோரும் இந்த உண்ணா நோன்பில் கலந்து கொண்டனர்.
புது டில்லியில் மட்டுமின்றி, இந்தியாவின் 200க்கும் அதிகமான நகரங்களில் இந்த உண்ணாநோன்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டதென UCAN செய்தி கூறுகிறது.
சட்டங்களைக் காக்க வேண்டிய சட்ட மன்ற உறுப்பினர்களே சட்டங்களை உடைக்கும் அவல நிலை இந்தியாவில் உருவாகியிருப்பதால், ஊழல் விவகாரங்களை முற்றிலும் ஒழிக்க மிகக் கடுமையான சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டுமென்று கோரி தான் இந்த மிகக் கடுமையான முடிவு எடுக்க வேண்டியிருந்ததென Hazare கூறினார்.72 வயதான Kisan Baburao Hazare, ஆசியாவின் நொபெல் பரிசு என்று வழங்கப்படும் மகசேசே விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.







All the contents on this site are copyrighted ©.