2011-04-05 15:24:56

தீர்மானம் எடுக்கும் நடவடிக்கைகளில் பெண்களும் அங்கம் வகிக்க வேண்டும்


ஏப்ரல்05,2011. இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் ஒருங்கிணைந்த மற்றும் முழுமையான வளர்ச்சி ஏற்பட வேண்டுமெனில் தீர்மானம் எடுக்கும் நடவடிக்கைகளில் பெண்களும் அங்கம் வகிக்க வேண்டும் என்று அருட்சகோதரிகளும் சமூக ஆர்வலர்களும் கூறினர்.
ஒரிசாவில் பெண்களுக்கு ஐம்பது விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசின் திட்டம் குறித்து கருத்து தெரிவித்த போது இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஒரிசாவில் 70.36 விழுக்காட்டு ஆண்களும் 37.67 விழுக்காட்டு பெண்களும் எழுத்தறிவு பெற்றவர்கள். இவர்களில் பூர்வீக இன மற்றும் தலித் இனப் பெண்களின் நிலை இன்னும் குறைவாக இருக்கின்றது.








All the contents on this site are copyrighted ©.