2011-04-02 14:49:54

மெக்சிகோவில் தற்கொலைகள் அதிகரித்து வருவது குறித்து கர்தினால் கவலை


ஏப்.02,2011. மெக்சிகோ நாட்டில் தற்கொலைகள் அதிகரித்து வருவது குறித்து அந்நாட்டு மெக்சிகோ நகர் கர்தினால் நொர்பெர்த்தோ ரிவேரா கரேரா (Norberto Rivera Carrera) கவலை தெரிவித்துள்ளார்.
மெக்சிகோ ஆய்வாளர் Guilherme Luiz Guimaraes Borges இவ்வாரத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில், அந்நாட்டில் 1970க்கும் 2007க்கும் இடைப்பட்ட காலத்தில் தற்கொலைகளின் எண்ணிக்கை 275 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் 15க்கும் 29 வயதுக்கும் இடைப்பட்ட இளையோர் இந்த ஆபத்தை அதிகம் எதிர்நோக்குகின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கையை வைத்து சுமார் இரண்டாயிரம் இளையோரிடம் பேசிய கர்தினால் ரிவேரா கரேரா, இளையோர் எத்தகைய மகிழ்ச்சியை அடைய விரும்புகின்றனர் என்ற கேள்வியை எழுப்பி நல்ல சமாரித்தன் போல பிரச்சனையில் இருக்கும் மற்றவர்க்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்







All the contents on this site are copyrighted ©.