2011-04-02 15:00:00

ஏப்ரல் 03, வாழ்ந்தவர் வழியில்...


இரண்டாம் உலகப் போரில் பெரும் அழிவுகளுக்குள்ளான பல ஐரோப்பிய நாடுகளை மீண்டும் கட்டியெழுப்பிய மார்ஷல் திட்டம் (Marshall Plan) 1948ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி ஆரம்பமானது.
அன்றைய அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலராக இருந்த George Marshall என்பவரால் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு அவரது பெயரே சூட்டப்பட்டது. அன்றைய அமெரிக்க அரசுத் தலைவரான Harry Truman போரினால் அழிவுற்ற 16 ஐரோப்பிய நாடுகளுக்கு 5 பில்லியன் அதாவது, 500 கோடி டாலர்களை வழங்கும் ஒப்பந்தத்தில் ஏப்ரல் 3ம் தேதி கையெழுத்திட்டார்.
நான்கு ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம் 1300 கோடி டாலர்கள் வழங்கப்பட்டன. இந்த நிதி உதவியை இரஷ்யாவுக்கும் அதன் தோழமை நாடுகளுக்கும் வழங்க அமேரிக்கா முன் வந்தது. ஆயினும், இந்நாடுகள் இவ்வுதவியை மறுத்து விட்டன. 1951ம் ஆண்டு இத்திட்டம் நிறைவுக்கு வந்தபோது, இந்த ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சி இரண்டாம் உலகப் போருக்கு முன்பு இந்நாடுகள் இருந்த நிலையைக் காட்டிலும் 35 விழுக்காடு உயர்ந்திருந்தது.







All the contents on this site are copyrighted ©.