2011-04-02 14:40:12

இணையதளத்தில் இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் குறித்த வீடியோ படக் காட்சிகள்


ஏப்ரல்02,2011. இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் பல நாடுகளுக்குத் திருப்பயணம் மேற்கொண்டது, அவரது உரைகள், சந்திப்புக்கள் என அவரைப் பற்றிய பல விபரங்கள் Youtube மற்றும் Facebook ல் பல மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன. வத்திக்கான் வானொலியும் CTV என்ற வத்திக்கான் தொலைக்காட்சி மையமும் இணைந்து இவற்றை வெளியிட்டுள்ளன.
என்றும் என்றும் வலைத்தளத்தில் சொடுக்கினால் இந்த வீடியோ ஒலி-ஒளிக் காட்சிகளைக் காணலாம். இக்காட்சிகளை ஒவ்வொரு நாளும் Facebook மற்றும் Youtube களில் எண்ணற்ற மக்கள் பார்த்தும் கேட்டும் பயனடைந்தும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் 2011, மே 01ம் தேதி முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தப்படவிருக்கிறார். சுமார் 27 ஆண்டுகள் கத்தோலிக்கத் திருச்சபையை வழிநடத்திய இவர், இத்தாலிக்கு வெளியே 104 திருப்பயணங்களை மேற்கொண்டார். இவர் 2005ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி இறைவனடி எய்தினார்







All the contents on this site are copyrighted ©.