2011-04-01 16:20:31

இந்தியாவில் பெண் கரு முட்டைகள் கொல்லப்படுவதற்கு எதிராகக் கத்தோலிக்கப் பெண்கள் உறுதிமொழி


ஏப்.01,2011: இந்தியாவில் பெண் கரு முட்டைகள் கொல்லப்படுவதற்கு எதிராகப் போர் ஒன்றை அறிவித்துள்ளனர் ஆஜ்மீர் மறைமாநிலக் கத்தோலிக்கப் பெண்கள்.
எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு, தகவல் உரிமை பெறும் சட்டம் உள்ளிட்ட சமூக விவகாரங்கள் குறித்து இவ்வாரத்தில் இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஆஜ்மீர் மறைமாநிலம் நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்ட கத்தோலிக்கப் பெண்கள் இவ்வாறு உறுதி எடுத்தனர்.
ஒவ்வொரு நாளும் பெண்சிசுக்கருக்கள் கருக்கலைப்பு செய்யப்படுவது பற்றியும் அக்கருத்தரங்கில் கூறப்பட்டது.
இவ்வியாழனன்று வெளியிடப்பட்ட இந்தியாவின் மக்கள்தொகை குறித்தப் புள்ளிவிபரங்களில் ஆயிரம் ஆண்களுக்கு 914 பெண்கள் வீதம் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இந்நிலை 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர் மிகக் குறைவான விகிதமாகும். உத்தரப் பிரதேசம், மஹாராஷ்டிரா, இராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் இதில் முன்னணியில் இருக்கின்றன







All the contents on this site are copyrighted ©.