2011-03-31 15:59:50

மலேசியாவில் விவிலியத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள நிபந்தனைகளை நீக்க கிறிஸ்தவ அமைப்புக்கள் வலியுறுத்தல்


மார்ச் 31,2011. மலேசியாவில் விவிலியத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள பல்வேறு தடைகளையும், நிபந்தனைகளையும் அரசு முற்றிலும் நீக்க வேண்டும் என்று அந்நாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்தவ அமைப்புக்களும் அரசை வலியுறுத்தி வருகின்றன.
Alkitab என்று அழைக்கப்படும் இவ்விவிலியப் பிரதிகளில் கடவுளை அல்லா என்று குறிப்பிட்டதால் உருவான பிரச்சனையைத் தொடர்ந்து, மலேசிய அரசு இவ்விவிலியப் பிரதிகளில் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
அண்மையில் தன்னிடம் இருந்த விவிலியங்களை மீண்டும் அளிக்க முன் வந்தபோது, அவ்விவிலியங்களில் கிறிஸ்தவர்களின் பயன்பாட்டிற்கு மட்டும் என்று முத்திரை குத்தி, அவற்றிற்கு எண்கள் இட்டு வெளியிட தீர்மானித்தது.நாட்டின் அமைதியைக் குலைக்கும் ஒரு புத்தகம் என்று Alkitabஐ அரசு கூறியிருப்பது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒரு கருத்து என்று கூறும் கிறிஸ்தவ அமைப்புகள், அரசு விதித்திருக்கும் அனைத்துத் தடைகளையும் நீக்கி, விவிலியத்தை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று போராடி வருகின்றன.







All the contents on this site are copyrighted ©.