2011-03-31 15:56:53

சென்டெய் ஆயர் : புகுஷிமா அணுமின் நிலையப் பகுதியில் கிறிஸ்தவர்களும் இடர்துடைப்புப் பணிகளில் ஈடுபட்டிருப்பது மகிழ்வைத் தருகிறது


துணிந்து எதிர்கொண்டு உழைத்து வரும் பல ஊழியர்கள் மத்தியில் கிறிஸ்தவர்களும் உழைத்து வருவது மிகுந்த மகிழ்வைத் தருகிறதென்று Sendai மறைமாவட்ட ஆயர் Martin Tetsuo Hiraga கூறினார்.
ஜப்பான் மக்களுக்கும், மனித குலத்திற்கும் உண்டாகியிருக்கும் இந்த ஆபத்தை நீக்க தங்கள் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மனிதகுலம் தலை வணங்கி மரியாதை செலுத்த வேண்டும் என்று கூறிய ஆயர், இந்தச் செயல் வீரர்கள் மத்தியில் நற்செய்தி மதிப்பீடுகளுக்கும், கிறிஸ்தவத்திற்கும் உயர்ந்த சாட்சிகளாய் உழைத்து வரும் கிறிஸ்தவர்களுக்குத் தன் சிறப்பான வாழ்த்துக்களைக் கூறினார்.தற்சமயம் புகுஷிமா அணுசக்தி நிலையத்திற்குள் 180 தன்னார்வத் தொண்டர்கள் உழைத்து வருகின்றனர் என்றும், இவர்கள் 50 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிந்து, பணி நேரங்களைத் தங்களுக்குள் பகிர்ந்து, பணி செய்து வருகின்றனர் என்றும் வத்திக்கானின் FIDES செய்தி நிறுவனம் கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.