2011-03-30 13:27:36

மார்ச் 31 வாழ்ந்தவர் வழியில்….


La Tour Eiffel என்று ப்ரெஞ்ச் மொழியில் அழைக்கப்படும் ஐஃபெல் கோபுரத்திற்குப் பிறந்த நாள் மார்ச் 31 என்று சொல்லலாம். ஏனெனில் இந்தக் கோபுரத்தின் தொடக்க விழா 1889ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்தியாவைக் குறிப்பிடுவதற்கு தாஜ்மஹாலைக் காட்டுவது போல, இந்த ஐஃபெல் கோபுரம்தான் பிரான்ஸை அடையாளம் காட்டுகிறது. பாரிசிலுள்ள மிக உயரமான கட்டிடமாகவும் உலகில் கட்டணம் செலுத்தி அதிகமானச் சுற்றுலாப் பயணிகள் பார்க்கும் இடங்களில் ஒன்றாகவும் திகழ்கின்றது. ஆண்டுதோறும் 55 இலட்சத்துக்கு மேற்பட்ட பயணிகள் இதைப் பார்வையிடுகிறார்கள். 1889ம் ஆண்டின் உலக வணிகக் கண்காட்சிக்கு நுழைவாயில் வளைவாக Gustave Eiffel என்ற பொறியியல் கலைஞரால் இது கட்டப்பட்டது. 324 மீட்டர் உயரமுடைய இதனை 300 உருக்கு வேலையாட்கள், ஐந்து இலட்சம் ஆணிகளைப் பயன்படுத்தி, 18,038 உருக்குத் துண்டுகளை ஒன்றுடனொன்று பொருத்திக் கட்டினார்கள். எனவே இது இரும்புப் பெண் என்ற புனைப்பெயராலும் அழைக்கப்படுகிறது. இதன் கட்டுமானப் பணிகளின் போது ஒரேயொரு தொழிலாளி மட்டுமே இறக்க நேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 1957ம் ஆண்டில் ஆன்டனாக்கள் இக்கோபுரத்தில் பொருத்தப்பட்ட பின்னர் இது நியுயார்க் நகர் Chrysler கட்டிடத்தைவிட உயரமாக விளங்குகிறது







All the contents on this site are copyrighted ©.