2011-03-30 15:32:04

மரண தண்டனைகள் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும் - அரிசோனா ஆயர்கள் அறிக்கை


மார்ச் 30,2011. நற்செய்தி படிப்பினைகளுக்கு முற்றிலும் நேர்மாறானவை என்பதால், மரண தண்டனைகள் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவின் அரிசோனா ஆயர்கள் அறிக்கை விடுத்துள்ளனர்.
1989ம் ஆண்டு ஒரு கடையில் திருடியபோது இருவரைக் கொன்ற Eric John King என்பவருக்கு இச்செவ்வாயன்றும், Daniel Wayne Cook என்பவருக்கு அடுத்த வாரமும் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுவதாக அரிசோனா மாநிலம் அறிவித்ததையொட்டி, ஆயர்கள் இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
கொலை குற்றங்கள் பல்வேறு பாதிப்புக்களை கொலையுண்டவர் குடும்பத்திலும், சமுதாயத்திலும் ஏற்படுத்துவது உண்மையே என்றாலும், இக்குற்றங்களைச் செய்தவர்களை வேறு வழிகளில் தண்டிக்கும் முறைகளை அரசுகள் ஆலோசனை செய்ய வேண்டும் என்று ஆயர்கள் கூறியுள்ளனர்.
சமுதாயத்தைக் குற்றவாளிகளிடமிருந்து காப்பதற்கு வேறு பல வழிகள் இருக்கும்போது, மரண தண்டனை மூலம் உயிர்களைப் பறிப்பது மனித மாண்புக்கும், உயிர்களின் புனிதத்திற்கும், நற்செய்தி விழுமியங்களுக்கும் எதிரானவை என்றும், மரண தண்டனைகள் சாவுக் கலாச்சாரத்தை உலகில் இன்னும் நிலை நிறுத்தும் என்றும் அரிசோனா ஆயர்களின் அறிக்கை கூறியுள்ளது







All the contents on this site are copyrighted ©.