2011-03-30 15:35:35

இயேசு சபைக் கவிஞர் Gerard Manley Hopkinsம் முத்திபேறு பெற்ற கர்தினால் Newmanம் புரட்சிகரமான எண்ணங்களை விதைத்தவர்கள்


மார்ச் 30,2011. 19ம் நூற்றாண்டில் சமகாலத்தில் வாழ்ந்த இயேசு சபைக் கவிஞர் Gerard Manley Hopkins மற்றும் முத்திபேறு பெற்ற கர்தினால் John Henry Newman இருவரும் புரட்சிகரமான எண்ணங்களை விதைத்தவர்கள் என்று அண்மையில் நடந்த ஒரு கருத்தரங்கில் கூறப்பட்டது.
அமெரிக்காவின் டென்வர் நகரில் அண்மையில் நடைபெற்ற அகில உலக Gerard Manley Hopkins கருத்தரங்கில் பேசிய Richard Austin என்ற ஆங்கிலேய நடிகர், Hopkinsன் கவிதைகள் மனதை மேலே எழுப்பும் வல்லமை பெற்றதென்றும், கடவுளை படைப்பு அனைத்திலும் காணும் ஒரு சிறந்த கண்ணோட்டத்தை கவிஞர் Hopkins கொண்டிருந்தார் என்றும் கூறினார்.
1844ம் ஆண்டு ஆங்கலிக்கன் குடும்பத்தில் பிறந்த Hopkins 1866ம் ஆண்டு முத்திபேறு பெற்ற கர்தினால் Newmanஆல் கத்தோலிக்கத் திருச்சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, இயேசுசபையில் 1877ம் ஆண்டு குருவாகத் திருநிலைப் படுத்தப்பட்டார்.
இங்கிலாந்தில் கத்தோலிக்கத் திருச்சபையின் வசந்த காலத்தை உருவாக்கியதில் முத்திபேறு பெற்ற கர்தினால் Newmanக்கும் இயேசு சபைக் கவிஞர் Gerard Manley Hopkinsக்கும் பெரும் பங்கு உள்ளதென்று இயேசு சபை குருவும், பேராசிரியருமான Peter Milward கூறினார்







All the contents on this site are copyrighted ©.