2011-03-29 14:59:32

குடிமக்களின் நலவாழ்வை விட, இராணுவச்செலவுகளுக்கென அதிக நிதி ஒதுக்கும் இங்கிலாந்து அரசின் செயலுக்கு கத்தோலிக்கர்கள் எதிர்ப்பு.


மார்ச் 28, 2011. இங்கிலாந்து அரசு, குடிமக்களின் நலவாழ்வை விட, இராணுவச் செலவுகளுக்கென அதிக நிதி ஒதுக்கிவருவது குறித்து பல தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து எதிர்ப்பு ஊர்வலம் ஒன்றில் கலந்து கொண்டது இங்கிலாந்தின் கத்தோலிக்க சமூகம்.
இங்கிலாந்து அரசின் நிதி ஒதுக்கீட்டு கொள்கை குறித்து கண்டனத்தை வெளியிட்டு அண்மையில் நடத்தப்பட்ட ஊர்வத்தில் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இங்கிலாந்து அரசானது இராணுவச் செலவுகளுக்கென 4,000 கோடி பவுண்டுகளை ஒதுக்கியிருக்கும் வேளை, 2,400 கோடி பவுண்டுகளையே வீட்டு வசதி வாரியத்திற்கும், 750 கோடி பவுண்டுகளையே வெளிநாட்டு வளர்ச்சித் திட்டங்களுக்கும் ஒதுக்கியிருப்பது குறித்து எதிர்ப்புத் தெரிவித்து இவ்வூர்வலம் நடத்தப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.