2011-03-29 14:57:52

இஸ்லாமியர்களுடன் பேச்சுவார்த்தைகளைத் துவக்கத் திட்டமிட்டுள்ளார் லெபனனின் மேரோனைட் ரீதி தலைவர்.


மார்ச் 29, 2011. பொது வாழ்வு மற்றும் ஒத்துழைப்பின் வருங்காலத்தைக் கட்டியெழுப்பும் நோக்குடன் இஸ்லாமியர்களுடன், நேர்மையான அதேவேளை முழு அளவிலான பேச்சுவார்த்தைகளைத் துவக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார் லெபனனின் மேரோனைட் ரீதி புதிய முதுபெரும் தலைவர் Bechara Rai.
பல மதங்களைக் கொண்டுள்ள லெபனனில் தற்போது அரசியல் மற்றும் பிரிவினை வாதங்களினால் விசுவாசத்தின் தூய்மை மற்றும் புனிதத்தன்மையும், மதங்களின் ஆன்மீகமும் களையப்பட்டு வருவது குறித்த கவலையையும் வெளியிட்டார் மேரோனைட் ரீதி முதுபெரும் தலைவர்.
லெபனன் நாடு என்பது ஒரு மதத்திற்கோ, கட்சிக்கோ, குழுவுக்கோ உரியதல்ல, அத்தகைய முயற்சிகள் ஏனைய மக்களைச் சிறுமைப்படுத்தவே உதவும் என்ற முதுபெரும் தலைவர் Rai, பல்வேறு மதங்களின் இருப்பிலிருந்து கிடைக்கும் வளமையிலேயே அந்நாட்டின் பெருமை அடங்கியுள்ளது என்றார்.








All the contents on this site are copyrighted ©.