2011-03-29 14:58:11

இரஷ்ய பள்ளிகளில் 'மதக்கலாச்சாரம் மற்றும் அறநெறிகளின் அடிப்படை' பற்றிய வகுப்புகள் இடம்பெற உள்ளன.


மார்ச் 29, 2011. அடுத்த ஆண்டில் இரஷ்யா முழுவதும் உள்ள பள்ளிகளில் 'மதக்கலாச்சாரம் மற்றும் அறநெறிகளின் அடிப்படை' பற்றிய வகுப்புகள் இடம்பெறும் என அந்நாட்டின் கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இவ்வாண்டில் இதனை ஒரு மாதிரிப் பாடமாக வைத்து வெற்றிகண்டதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டிலிருந்து இதனை நாடு முழுவதும் செயல்படுத்த உள்ளதாக அறிவித்தது இரஷ்ய அமைச்சகம்.
மதங்கள் தடைசெய்யப்பட்டிருந்த கம்யூனிச நாடான இரஷ்யாவில் இவ்வாண்டு மதப்பாடங்கள் சோதனை அளவில் பள்ளிகளில் புகுத்தப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்கள் இதில் அதிக ஆர்வம் காட்டி அது வெற்றி பெற்றுள்ளதாக மதத்தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ ரீதி, இஸ்லாம், யூதம், புத்தம் ஆகிய நான்கு மதங்களுள் ஏதாவது ஒன்றின் வரலாறு, அல்லது மதக்கலாச்சாரத்தின் வரலாறு அல்லது அறநெறிக்கொள்கைகளின் அடிப்படைகள் என்பது குறித்து தேர்வு செய்து கற்க தற்போது இரஷ்ய மாணவர்களுக்கு வாய்ப்பை வழங்கியுள்ளது அரசு.








All the contents on this site are copyrighted ©.