2011-03-29 14:58:25

ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் : உலக அளவில் மரணதண்டனை நிறைவேற்றப்படுவது குறைந்துள்ளது


மார்ச் 28,2011. 2010ம் ஆண்டில் 23 நாடுகள் மரணதண்டனை நிறைவேற்றியிருந்தாலும், இது 2009ம் ஆண்டைவிட 4 நாடுகள் அதிகமிருந்தாலும், இத்தண்டனை நிறைவேற்றப்படுவோரின் எண்ணிக்கை 714லிருந்து குறைந்து 527 ஆக ஆகியுள்ளது என்று ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமைகள் கழக ஆண்டறிக்கைக் கூறுகிறது.
2010ம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாடு 46 பேருக்கு மரணதண்டனைகளை நிறைவேற்றியிருக்கிறது என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
2009ம் ஆண்டில் ஐரோப்பாவில் இத்தண்டனை இடம் பெறாமல் இருந்தது, ஆனால் கடந்த ஆண்டில் பெலாருஸ் 2 பேருக்கு இத்தண்டனையை நிறைவேற்றியிருக்கிறது.
கடந்த ஆண்டில் காபோன் இத்தண்டனையை இரத்து செய்தது. இத்துடன் உலகில் 139 நாடுகளில் இத்தண்டனை இரத்து செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் 2010ம் ஆண்டில் குறைந்தது 2000 பேருக்கு இத்தண்டனை நிறைவேற்றப்பட்டது, எனினும் இவ்வெண்ணிக்கை சுமார் எட்டாயிரமாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.