2011-03-28 15:03:28

மார்ச் 29 வாழ்ந்தவர் வழியில் .....


ஜார்ஜ் பீட்டர் முர்டாக் (George Peter Murdock) என்பவர், ஒரு குறிப்பிடத்தக்க அமெரிக்க மானிடவியலாளர். இவர், Connecticut மாநிலத்தின், Meriden என்னும் ஊரில் 1897ம் ஆண்டு மே 11ம் தேதி பிறந்தார். வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்த இவர், தனது இளமைக் காலத்தின் பெருமளவு நேரத்தைப் பண்ணையில் வேலை செய்தே கழித்தார். இதன் மூலம் மரபுவழியானதும், இயந்திரமயம் ஆகாததுமான பல வேளாண்மை முறைகளைப் பற்றி அறிந்து கொண்டார். இவர் யேல் பல்கலைக்கழகத்தில் படித்து, அமெரிக்க வரலாற்றில் பட்டம் பெற்றார். பின்னர் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். எனினும் இரண்டாவது ஆண்டில் கல்லூரியை விட்டு விலகி, நீண்டதொரு உலகப் பயணத்தை மேற்கொண்டார். இந்தப் பயணமும், மரபுவழிப் பண்பாடுகளில் இவருக்கிருந்த ஆர்வமும், இவரது ஆசிரியர் ஏ. ஜி கெல்லர் என்பவரிடமிருந்து கிடைத்த அகத்தூண்டுதலும் இவரை மானிடவியல் மீது ஆர்வம் கொள்ள வைத்தன. இதனால் யேல் பல்கலைக்கழகத்திலேயே மானிடவியலும் கற்றார். 1925ம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்று, அப்பல்கலைக்கழகத்திலேயே மானிடவியல் துறைக்குத் தலைவரானார். உலகின் பல இனங்கள், பல கலாச்சாரங்கள் மற்றும் பழங்கால மக்கள் பற்றிய இவரது ஆய்வுகள் இவருக்குப் பேரும் புகழும் தேடித் தந்தன. 1959ல் இவர் வெளியிட்ட ஆப்ரிக்க மக்களின் கலாச்சாரம் மற்றும் அம்மக்கள் பற்றிய வரலாறு ஆப்ரிக்கர்கள் தங்களது இனங்களின் மூதாதையர் பற்றி அறிவதற்கு உதவியாக இருக்கின்றன. முர்டாக் 1985ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி இறந்தார்







All the contents on this site are copyrighted ©.