2011-03-28 16:45:08

ஃப்ளோரிடாவில் குரான் எரிக்கப்பட்டதற்கு எதிரொலியாகப் பாகிஸ்தானில் ஆலயங்கள் சேதம்


மார்ச்28,2011. அமெரிக்க ஐக்கிய நாட்டு ஃப்ளோரிடாவில் குரான் எரிக்கப்பட்டதற்கு எதிரொலியாகப் பாகிஸ்தானில் ஆலயங்கள் தாக்கப்பட்டுள்ளன, இரண்டு விசுவாசிகள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் விவிலியப் பிரதிகள் எரிக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானின் ஹைதராபாத் மற்றும் லாகூரில் இசுலாம் தீவிரவாதிகள் கிறிஸ்தவ வழிபாட்டுத்தலங்களைத் தாக்கி விவிலியப் பிரதிகளை அவமரியாதை செய்துள்ளன.
இம்மாதம் 20ம் தேதி ஃப்ளோரிடாவில் பாதிரியார் வாய்னே சாப் என்பவர், இவாஞ்சலிக்கல் சபை போதகர் டெரி ஜோன்ஸின் மேற்பார்வையில் குரானை எரித்தார். இந்த மடத்தனமான செயலை இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் கண்டித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இச்சனிக்கிழமை இரவு லெபனன் நாட்டு Zahle நமதன்னை சீரோ ஆர்த்தடாக்ஸ் ஆலயத்துக்கு முன்பாகப் பயங்கரவாதக் குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் ஆலயத்தின் உள்பகுதி சேதமாகியுள்ளது








All the contents on this site are copyrighted ©.