2011-03-26 15:29:15

மார்ச் 27, வாழந்தவர் வழியில்...


1895ம் ஆண்டு உருவாக்கப்பட்ட நொபெல் பரிசுகள் முதல் முறையாக 1901ம் ஆண்டு வழங்கப்பட்டன. இயற்பியலுக்கான முதல் நொபெல் பரிசை வென்றவர் வில்ஹெம் கொன்ராட் ரொண்ட்ஜென் (Wilhelm Conrad Röntgen) என்ற ஜெர்மன் நாட்டு இயற்பியலாளர். இவர் மின்காந்தக் கதிர்வீச்சைக் கண்டுபிடித்தார். இன்று இவை ஊடுகதிர் அலைகள் அல்லது எக்ஸ் கதிர்கள் என்று அழைக்கப்படுகின்றன.
வில்ஹெம் ரொண்ட்ஜென் 1845ம் ஆண்டு, மார்ச் 27ம் நாள் பிறந்தார். தொழில்நுட்பக் கல்லுரியில் உயர்கல்வியை பயின்றார். சூரிக் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்று, முனைவர் பட்டம் பெற்றார்.1874ம் ஆண்டு முதல், ஸ்ட்ராஸ்பெர்க், மியூனிக் ஆகிய பல்கலைக்கழகங்களில் பணி புரிந்தார். 1895ம் ஆண்டு வேறொரு பரிசோதனையில் ஈடுபட்டிருந்த வில்ஹெம் ரொண்ட்ஜென், எக்ஸ் கதிர்களைத் தற்செயலாகக் கண்டுபிடித்ததாக அவரே பேட்டி அளித்துள்ளார். அறிவியலுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த இவர், 1923ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி காலமானார். இவர் கண்டுபிடித்த எக்ஸ் கதிர்கள் மூலம் மருத்துவத் துறையில் பல பயனுள்ள முன்னேற்றங்கள் தோன்றியுள்ளன.







All the contents on this site are copyrighted ©.