2011-03-25 15:40:21

பிரிட்டன் ஆயர் : லிபியாவில் நடத்தப்படும் கூட்டணிப் படைகளின் தாக்குதல்கள் பொது மக்களைக் காப்பாற்றும் குறிக்கோளிலிருநது பிறழக் கூடாது


மார்ச்25,2011. லிபிய அதிபர் கடாபிக்கு எதிரான மேற்கத்தியக் கூட்டணிப் படைகளின் இராணுவ நடவடிக்கைகள் குறித்துப் பேசிய பிரிட்டன் இராணுவத்திற்கான ஆன்மீக ஆலோசகர் ஆயர் Richard Moth, லிபியாவில் அப்பாவி பொது மக்களைக் காப்பாற்ற வேண்டுமென்ற தங்கள் இலக்கிலிருந்து தவறக்கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
லிபிய சர்வாதிகாரி கடாபியின் இராணுவத் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகள், அத்தாக்குதலிலிருந்து அப்பாவி பொது மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாக மட்டுமே இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
ஐ.நா.பாதுகாப்பு அவை இம்மாதம் 17ம் தேதி லிபியாவுக்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானத்திற்குப் பின்னர் மேற்கத்திய போர் விமானங்கள் லிபியா வான்பரப்பில் 300க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளன என்று சொல்லப்பட்டுள்ளது.
பிரித்தானிய அரசு, லிபியா தொடர்பான பன்னாட்டுக் கூட்டம் ஒன்றை வருகிற செவ்வாய்க்கிழமை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது







All the contents on this site are copyrighted ©.