2011-03-23 16:03:01

புனித பூமியில் மங்களவார்த்தைப் பேராலயத்திற்கு எதிரே அகில உலக பல்சமய உரையாடல் மையம் திறப்பு


மார்ச் 23,2011. இயேசு கிறிஸ்துவின் பிறப்பு குறித்து மரியாவுக்கு அறிவிக்கப்பட்ட திருநாள் மார்ச் 25, இவ்வெள்ளியன்று கொண்டாடப்படவிருக்கும் வேளையில், புனித பூமியின் நாசரேத்தில் உள்ள மரியாவின் மங்களவார்த்தைப் பேராலயத்திற்கு எதிரே அகில உலக பல்சமய உரையாடல் மையம் ஒன்று திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாசரேத்தூர் மரியாவின் பன்னாட்டு மையம் என்று அழைக்கப்பட விருக்கும் இந்த மையத்தை எருசலேமின் இலத்தீன் ரீதி முதுபெரும் தலைவர் Fouad Twal திறந்து வைப்பார்.
இவ்வெள்ளியன்று மாலை ஐந்து மணி அளவில் நடைபெறும் இவ்விழாவில், எருசலேமில் உள்ள அனைத்து கிறிஸ்தவ சபைகள், மற்றும் பிற மதத்தைச் சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்வர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.யூத பாரம்பரியத்தில், கீழைரீதி சபைகளில் மற்றும் குர்ஆனில் மரியா எவ்விதம் கருதப்படுகிறார் என்பது குறித்த விவரங்கள் இந்த மையத்தில் கிடைக்கும் என்றும், இதன் வழியாக பல்வேறு சமயங்களுக்கிடையே புரிதலை வளர்க்கும் ஒரு முயற்சியாக இம்மையம் அமையும் என்றும் இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.