2011-03-22 15:31:44

லிபியாவில் இடம்பெறும் தாக்குதல்கள் குறித்து ஆயர் கவலை.


மார்ச் 22, 2011. டிரிப்போலியின் புறநகர்ப்பகுதியில் இடம்பெற்றுவரும் வெடிகுண்டுத் தாக்குதலால் அந்நகர் மக்கள் வெளியேறி வருவதாக கவலையை வெளியிட்டுள்ளார் டிரிப்போலியின் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Giovanni Innocenzo Martinelli.
போரின் மூலம் எந்த தீர்வையும் காணமுடியாது என்பதை வலியுறுத்தியுள்ள ஆயர், தாக்குதல்கள் உடனடியாக முடிவுக்கு வந்து, பிரச்னைக்குத் தீர்வுகாணும் நோக்கில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் துவக்கப்படவேண்டும் என விண்ணப்பித்தார்.
அரசியல் ரீதியான தீர்வுகள் ஏன் முன்வைக்கப்படவில்லை என்ற கேள்வியை எழுப்பியுள்ள ஆயர் Martinelli, லிபியாவில் உள்ள எரிட்ரிய அகதிகளை துனிசிய எல்லைக்கு அனுப்பும் நோக்கில் தலத்திருச்சபை முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் எடுத்துரைத்தார். துனிசிய எல்லையில் சர்வதேச மனிதபிமான உதவி நிறுவனங்கள் சேவையாற்றி வருவதால் லிபியா வாழ் எரிட்ரிய அகதிகளை அங்கு அனுப்புவதில் உதவி வருகிறது லிபியத் தலத்திருச்சபை.








All the contents on this site are copyrighted ©.