2011-03-22 15:34:32

புனித பூமிக்கென புனித வெள்ளியன்று நன்கொடை திரட்டப்படுகிறது.


மார்ச் 22, 2011. புனித பூமிக்கென உலகம் முழுவதும் புனித வெள்ளியன்று நன்கொடை திரட்டப்படும்போது தாராளமனதுடன் செயல்படுமாறு அழைப்பு விடுத்துள்ளார் கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி.
புனித பூமிக்கு உதவ வேண்டிய திருச்சபையின் அர்ப்பணம் குறித்து அனைத்து மறைமாவட்டங்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள கீழை ரீதி திருச்சபைக்கானத் திருப்பேராயத்தின் தலைவர் கர்தினால் சாந்த்ரி, அகில உலகத் திருச்சபையுடன் சகோதரத்துவ ஒருமைப்பாட்டை எதிர்பார்க்கும் புனித பூமியுடன் அருட்கொடைகளையும் துயர்களையும் பகிரவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
புனித பூமியின் துயர்களால் கிறிஸ்தவ சமுதாயம் அங்கிருந்து வெளியேறி வருவது மிகுந்த கவலை தருவதாக உள்ளது என்ற கர்தினால், இதனால் அப்பகுதி இளைய சமுதாயத்தை இழந்து வருங்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது என மேலும் உரைத்தார்.
எருசலேம், இஸ்ராயேல், பாலஸ்தீனம் மற்றும் ஜோர்தானின் கிறிஸ்தவர்களுக்கு ஊக்கத்தை வழங்கும் நோக்கில் ஒவ்வோர் ஆண்டும் புனித வெள்ளியன்று திரட்டப்படும் நிதியானது, அமைதிப் பணிகளுக்கெனவும், கீழை நாடுகளின் கிறிஸ்தவர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கெனவும் பயன்படுத்தப்படும் என்றார் கர்தினால் சாந்த்ரி.








All the contents on this site are copyrighted ©.