2011-03-21 14:49:19

மார்ச் 22 வாழ்ந்தவர் வழியில் .....


டி. எஸ். செனநாயக்கா (Don Stephen Senanayake) என்னும் டான் ஸ்டீபன் செனநாயக்கா, சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரும், இலங்கையின் தேசத் தந்தையும் ஆவார். புத்த மதத்தினரான இவர், 1931இல் மாநில அவைக்கு தெரிவு செய்யப்பட்டதுடன் வேளாண்மை மற்றும் குடியிருப்பு அமைச்சரானார். வேளாண் மறுமலர்ச்சிக்குப் பெரிதும் உழைத்தார். 1946 இல் பிரித்தானிய அரசினால் வழங்கப்பட்ட Knight பட்டத்தை ஏற்க மறுத்தாலும் பிரித்தானியருடன் நல்லுறவை வளர்க்க விரும்பினார். 1947இல் நடந்த பொதுத் தேர்தலில் ஜக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு இலங்கையின் முதலாவது பிரதமரானார். 1948ஆம் ஆண்டு பிப்ரவரி 4இல் பிரித்தானிய ஆதிக்கம் முடிவுற்றதும் முழு இலங்கையையும் நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றார். 1884ஆம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி பிறந்த டி. எஸ். செனநாயக்கா, 1952ம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி காலமானார். இவர் குதிரைச் சவாரியின் போது விழுந்து காயமடைந்து இறந்தார்.
“அறிவுள்ள ஒருவருடன் நடத்தும் ஓர் உரையாடல் ஒரு மாத காலத்தில் வாசித்தப் புத்தகங்களுக்குச் சமம்” என்கிறது ஒரு சீனப் பழமொழி.







All the contents on this site are copyrighted ©.