2011-03-19 14:47:14

திருத்தந்தை 16ம் பெனடிக்டின் புதிய புத்தகம் New York Times ன் அமோக விற்பனை பட்டியலில் இடம் பெற்றுள்ளது


மார்ச்19,2011. கடந்த வாரத்தில் வெளியிடப்பட்ட திருத்தந்தை 16ம் பெனடிக்டின் “நாசரேத்தூர் இயேசு : இரண்டாம் பாகம்” புத்தகம் New York Times அமெரிக்க தினத்தாளின் அமோக விற்பனைப் பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்றுள்ளது என்று கூறப்படுகிறது.
“நாசரேத்தூர் இயேசு இரண்டாம் பாகம்: எருசலேமில் நுழைவதிலிருந்து உயிர்ப்புவரை” என்ற தலைப்பிலான திருத்தந்தையின் புத்தகம் இந்த மார்ச் 10ம் தேதி வெளியிடப்பட்டது. உலகில் அண்மையில் வெளியிடப்பட்ட பிரபரலமான புத்தகங்களின் அமோக விற்பனைப் பட்டியலில் திருத்தந்தையின் இப்புத்தகம் இடம் பெற்றுள்ளது.
இது குறித்துப் பேசிய, இப்புத்தகத்தை அச்சிட்ட இக்னேஷியுஸ் அச்சகத் தலைவர் Mark Brumley, இயேசு கிறிஸ்துவின் வாழ்வில் திருத்தந்தை 16ம் பெனடிக்டின் உள்ளுணர்வுகளை பலர் கண்டுணரத் தொடங்கியுள்ளனர் என்று கூறினார்







All the contents on this site are copyrighted ©.