2011-03-18 15:48:34

ஜப்பான் நிலநடுக்கத்தால் பூமி சுற்றும் வேகம் அதிகரிப்பு


மார்ச் 16,2011 ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம், பூமியின் சுற்றும் வேகத்தை அதிகரித்துள்ளது. அதனால் ஒரு நாளின் நேரத்தில் குறைவு ஏற்படும்' என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
6,852 தீவுக் கூட்டங்களைக் கொண்ட ஜப்பான் நாட்டிலுள்ள ஹொக்கைடோ, ஹோன்ஷூ, ஷிகோக்கு, கியூஷூ ஆகிய நான்கு பெரிய தீவுகளில் ஹோன்ஷூ தீவில்தான் தலைநகர் டோக்கியோ உள்ளது. இந்த அண்மை நிலநடுக்கத்தால், ஹோன்ஷூ தீவு, 8 அடி நகர்ந்துள்ளதாகவும், பூமியின் அச்சு 17 செ.மீ., நகர்ந்துள்ளதாகவும் அமெரிக்க நிலவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது பூமியின் எடையில் சிறிது மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதன் சுற்றும் வேகம் சிறிது அதிகரித்துள்ளது. இதனால், ஒரு நாளில் மொத்த வினாடிகளில் 1.8 மைக்ரோ வினாடிகள் குறையும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.