2011-03-17 15:35:51

மார்ச் 18 - வாழ்ந்தவர் வழியில்.....


பிரான்ஸ் நாட்டுத் தலைநகர் பாரிசில் ஜெர்மனியைச் சேர்ந்த பெற்றோருக்கு 1858ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி பிறந்தவர் அறிவியலாளர் ருடால்ப் டீசல். இவர் ஜெர்மானியக் கண்டுபிடிப்பாளர் மற்றும் இயந்திரப் பொறியியலாளர். டீசல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர். இவரது கண்டுபிடிப்புக்களால் கப்பல்களும் இரயில்களும் நிலக்கரியிலிருந்து டீசலுக்கு மாறின. 1892ல் இவருடைய பெயரினாலான இயந்திரத்துக்கு காப்புரிமை பெற்றார். எரிபொருள் மற்றும் காற்றுக் கலவைக்கு இந்த இயந்திரத்தில் பொறி தேவைப்படவில்லை. இவர் பலரது பொறாமைகளுக்கு உள்ளானார். 1913ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதிக்குப் பிறகு இவரை யாரும் உயிரோடு பார்க்கவில்லை. 1913ல் இலண்டனில் சென்ற கப்பலில் பயணித்த ருடால்ப் டீசல் திடீரெனக் காணாமல் போனார். பத்து நாட்களுக்குப் பின்னர் இவரது உடல் கிடைத்தது. இவரது மரணத்துக்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டன. தற்கொலை செய்திருக்கலாம் அல்லது நிலக்கரிச் சுரங்க முதலாளிகள் இவரைக் கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
“மருந்துச் செடிக்கும் நோய் வரும். ஒரு மருத்துவனுக்கும் நோய் வரும். பிறப்பு இறப்பு என்பது எல்லார்க்கும் உண்டு”.(பங்காரு அடிகளார்)







All the contents on this site are copyrighted ©.