2011-03-16 16:04:11

மார்ச் 17. – வாழ்ந்தவர் வழியில்........,


வங்காள தேசத்தின் தந்தை எனப் போற்றப்படும் சேக் முஜிபுர் இரகுமான் 1920ம் ஆண்டு மார்ச் 17ம் தேதி பிறந்தார். கிழக்கு பாகிஸ்தானில் வாழ்ந்த வங்காள மக்களின் தலைவராக இருந்தவர். அவாமி லீக் கட்சியின் தலைவராகவும் வங்காள தேசத்தின் முதலாவது அதிபராகவும் பின்னர் 1972 முதல் 75 வரை அந்நாட்டின் பிரதமராகவும் இருந்தவர்.
1975 இல் இடம்பெற்ற இராணுவப் புரட்சி ஒன்றில் ஆகஸ்ட் 15ந்தேதி சேக் முஜிபுர் இரகுமான், அவரது மனைவி, மூன்று மகன்கள், இரண்டு மருமகள்கள் மேலும் அவர்களது குடும்பத்தவர்கள் 20 பேர் ஒட்டு மொத்தமாகப் படுகொலை செய்யப்பட்டனர். முஜிபுர் இரகுமானின் புதல்வியும் தற்போதைய பிரதமருமான ஷேக் ஹசீனா மற்றும் அவரது சகோதரி ஷேக் ரெஹானா ஆகியோர் வெளிநாட்டில் (மேற்கு ஜெர்மனியில்) இருந்ததால் உயிர் பிழைத்தனர். சேக் ஹசீனா ஏற்கனவே 1996 முதல் 2001 வரை வங்கதேசத்தின் பிரதமராக இருந்துள்ளார். சேக் முஜிபுர் இரகுமானின் படுகொலைக்குக் காரணமானவர்கள் ஏறக்குறைய 35 ஆண்டுகளுக்குப் பின்னர் மரணதண்டனை பெற்றனர். 1971ஆம் ஆண்டு பங்களாதேஷ் தனி நாடாக உருவாகக் காரணமாக இருந்தவர் முஜிபுர் இரகுமான்.








All the contents on this site are copyrighted ©.