2011-03-16 16:12:54

நாட்டில் அணு சக்தி நிலையங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பிலிப்பின்ஸ் ஆயர் பேரவை


மார்ச் 16,2011. ஜப்பானில் தொடர்ந்து வரும் அணுக் கதிர்வீச்சு ஆபத்துக்களைப் பார்க்கும்போது, பிலிப்பின்ஸ் நாட்டில் அணு சக்தி நிலையங்களுக்கு தாங்கள் தெரிவித்து வந்த எதிர்ப்பு நியாயமானதே என்று பிலிப்பின்ஸ் ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.
பிலிப்பின்ஸ் நாட்டில் Bataan பகுதியில் இயங்கவிருந்த அணுசக்தி நிலையத்திற்கு ஆரம்பத்திலிருந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வந்தது அந்நாட்டின் ஆயர் பேரவை.
1970களில் Marcosன் சர்வாதிகார ஆட்சி காலத்தில் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணு மின் நிலையம், பல்வேறு காரணங்களால் இன்னும் இயங்க ஆரம்பிக்கவில்லை. தலை நகர் மணிலாவுக்கு 60 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிலையத்தை இனி ஆரம்பிக்காமல் இருப்பதே நாட்டுக்கு நல்லதென்று ஆயர்கள் கருத்தைத் தெரிவித்துள்ளனர்.அணு சக்தியை நம்புவது ஆபத்தை விளைவிக்கும் என்று ஆயர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கூறிவந்திருப்பதற்குத் தகுந்த ஒரு நிரூபணமாக ஜப்பான் சந்தித்துள்ள ஆபத்துக்கள் அமைந்துள்ளன என்று பிலிப்பின்ஸ் ஆயர் பேரவைப் பொதுநலக் குழுவின் தலைவர் ஆயர் Deogracias Iniguez கூறினார்.







All the contents on this site are copyrighted ©.