2011-03-16 16:14:01

Facebook மற்றும் YouTube வழியாக இறையடியார் இரண்டாம் ஜான்பால் குறித்த ஒலி-ஒளி பதிவுகள்


மார்ச் 16,2011. மறைந்த திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் மே மாதம் முதல் நாளன்று முத்திபேறு பெற்றவராக உயர்த்தப்படுவதையொட்டி, Facebook மற்றும் YouTube வழியாக அவரை மக்கள் இன்னும் அதிகம் அறிந்துகொள்வதற்கான முயற்சிகளில் வத்திக்கான் வானொலியும், வத்திக்கான் தொலைக்காட்சியும் இணைந்து இறங்கியுள்ளன.
இறையடியார் இரண்டாம் ஜான்பால் திருச்சபையின் தலைமைப் பொறுப்பில் இருந்த ஆண்டுகளில் எடுக்கப்பட்ட பல்வேறு வீடியோ பதிவுகளையும், அவரது பல்வேறு உரைகளின் குரலோலியையும் இணையதளத்தின் மூலம் பலரும் பார்க்கும்படியான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று வத்திக்கான் பத்திரிகை அலுவலகம் இச்செவ்வாயன்று அறிவித்துள்ளது.ஏற்கனவே YouTubeல் உள்ள வத்திக்கான் அலைவரிசை (Vatican Channel) அன்றி, இரண்டாம் ஜான்பால் அலைவரிசை (John Paul II channel) வழியாக அவரது வாழ்க்கை வரலாற்றையும், மே மாதம் முதல் நாள் குறித்த பல்வேறு விவரங்களையும் மக்கள் அறிந்துகொள்ள முடியும் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.