2011-03-15 15:36:45

புனித பூமிப் பகுதியிலிருந்து கிறிஸ்தவர்கள் வெளியேறுவது நிறுத்தப்பட உதவுமாறு திருப்பீட அதிகாரி அழைப்பு


மார்ச்15,2011: கிறிஸ்தவத்தின் தொட்டிலாக அமைந்துள்ள புனித பூமிப் பகுதியிலிருந்து கிறிஸ்தவர்கள் வெளியேறுவது நிறுத்தப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கேட்டுக் கொண்டார்.
"குடியேற்றதாரர், அகதிகள் ஆகிய இவர்களுக்கான மேய்ப்புப்பணி:ஜோர்டன், இஸ்ரேல், எருசலேம், பாலஸ்தீனம், சைப்ரஸ் ஆகிய பகுதிகளின் தற்போதைய நிலைமையும் சவால்களும்" என்ற தலைப்பில் இடம் பெறும் கூட்டத்தில் இவ்வாறு கேட்டுக் கொண்டார் திருப்பீட குடியேற்றதாரர் அவைத் தலைவர் பேராயர் Antonio Maria Vegliò.
கிறிஸ்தவச் சமூகங்கள் உயிர்த்துடிப்புடன் வாழும் இடங்களில் கிறிஸ்தவம் என்பது தனியார் சொத்தாக மாறி வருகிறது என்றுரைத்த பேராயர் Vegliò, இந்தப் பகுதிகளில் குடியேற்றதாரர் மற்றும் அகதிகளுக்கு உதவுவதற்குக் கிறிஸ்தவ சபைகள் மத்தியில் ஒத்துழைப்பு அவசியம் என்பதையும் வலியுறுத்தினார்.
இந்தப் பணியை இறைவார்த்தையின் ஒளியில் நோக்குமாறும் கேட்டுக் கொண்ட அவர், தங்களது பாரம்பரிய இடங்களிலிருந்து வேரோடு பெயர்த்தெறியப்படும் அச்சுறுத்தலை எதிர்நோக்கும் கிறிஸ்தவர்களுக்கு அனைத்துச் சபைகளும் ஒன்றிணைந்து செய்ல்படுமாறும் பரிந்துரைத்தார்







All the contents on this site are copyrighted ©.